கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, October 9, 2014

    வாக்காளர் பட்டியல் புதிதாக பெயர் சேர்க்க வாய்ப்பு: அக் 19ம் தேதி, நவ., 2ம் தேதி சிறப்பு முகாம்( நவம்பர் 2 கிருஸ்துவர்கள் கொண்டாடும் கல்லறை திருநாள்)

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வரும் 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், நவ., 10 வரை சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, காங்கயம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை என எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தல் நிலவரப்படி, ஒன்பது லட்சத்து 79 ஆயிரத்து 993 ஆண்கள்; ஒன்பது லட்சத்து 60ஆயிரத்து 748 பெண்கள்; 107 திருநங்கைகள் என 19 லட்சத்து 40 ஆயிரத்து 848 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதைத்தொடர்ந்து ஒரு மாதம் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்கள் பட்டியலில் இணைக்கப்படும். அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள் ளிட்ட பணிகள் நடக்கும். பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, கள ஆய்வு நடத்தி, ஜன., மாதம் முதல் வாரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.அதன் அடிப்படையில், வரும் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடவும், சுருக்க முறை திருத்த பணிகளை மேற்கொள்ளவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை துவக்க, தாலுகா அலுவலகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும், வரும் 15ல் வரைவு பட்டியல் வெளியிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நவ., 10 வரை, பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சுருக்க முறை திருத்த பணிகள் நடக்கும். தாலுகா அலுவலகத்துக்கு செல்லாமல், அந்தந்த ஓட்டுச்சாவடிகளிலேயே, விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, வரும் 19ம் தேதி, நவ., 2ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று பரிசீலித்து, தேவையான கள ஆய்வு நடத்தி, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரித்து, வரும் (2015) ஜன., 5ல் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்க்கும் இளம் வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25ல் அடையாள அட்டை வழங்கப்படும். புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    No comments:

    Post a Comment